ADDED : மே 03, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே 70 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில் 70 மூடைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. எந்த ஆவணமும் இல்லாததால் அரிசி மூடைகளுடன், தேவகோட்டையை சேர்ந்த டிரைவர் பிரவீனை ஆர்.எஸ்.மங்கலம் சிவில் சப்ளை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.