/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி பிரசாரம் செய்த மினி சரக்கு வேன் பறிமுதல்
/
அனுமதியின்றி பிரசாரம் செய்த மினி சரக்கு வேன் பறிமுதல்
அனுமதியின்றி பிரசாரம் செய்த மினி சரக்கு வேன் பறிமுதல்
அனுமதியின்றி பிரசாரம் செய்த மினி சரக்கு வேன் பறிமுதல்
ADDED : ஏப் 16, 2024 03:57 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை பகுதியில் கட்சி கொடி கட்டி அனுமதியின்றி ஒலி பெருக்கியுடன் பிரசாரம் செய்த மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை பகுதியில் அனுமதியின்றி அ.தி.மு.க., கொடி, முத்தரையர் கொடியும், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் படத்துடன் இரட்டை இலை சின்னத்துடன் மினி சரக்கு வேனில் பிரசாரம் செய்தனர்.
இது குறித்து பறக்கும் படை தேர்தல் அதிகாரி மலைராஜன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து டிரைவர் ரஞ்சித் மீது வழக்கு பதிந்தனர்.------