/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வண்டிக்கார தெருவில் நெரிசல்
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வண்டிக்கார தெருவில் நெரிசல்
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வண்டிக்கார தெருவில் நெரிசல்
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வண்டிக்கார தெருவில் நெரிசல்
ADDED : ஜூன் 27, 2024 05:53 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் வண்டிக்காரத்தெருவில் ரோட்டின் இருபுறங்களிலும் கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு அலுவலகம், நகராட்சி அலுவலகம், இதுபோக நகராட்சி பள்ளி, வணிக வளாகங்கள், வங்கிகள், கடைகள் பல உள்ளன.
எப்போதுமே வாகன போக்குவரத்து மிகுந்த வண்டிக்காரத்தெருவில் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் ஒருபுறம், மேலும் கண்டபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.