/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில கராத்தே போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
/
மாநில கராத்தே போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
மாநில கராத்தே போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
மாநில கராத்தே போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : செப் 01, 2024 05:01 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் எம்.ஜி., பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றதால் பள்ளி நிர்வாகம் சார்பில் பராட்டினர்.
மதுரை நோட்புக் அரங்கத்தில் ஆக.25 ல் 9-வது தமிழ்நாடு மாநில கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
இதில் ராமநாதபுரம் எம்.ஜி., பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.எ.ஜாசிர் 30--35 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றார். எஸ்.பிரானேஷ் 40--45 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். தியா 11 வயது கட்டா பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார்.
பி.ஜோஹித் 20--25 எடை பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். லிவனேஷ் குமுத்தே 25--30 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார்.
எம்.சைவன்சச்சின் 9 வயது கட்டா பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். ஜே.ரித்திஷ் 35--40 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் எஸ்.ஹர்ஷவர்த்தன், தலைமையாசிரியை விஜி, உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.