
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : கடலாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் உள்ள வேதாள முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
நான்கு கால யாகசாலை பூஜைக்கு பின் நேற்று காலை 10:00 மணிக்கு வேதாள முனீஸ்வரர் கோயிலில் கோபுர விமான கலசத்தில்சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சாத்தங்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

