/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணியில் அசுத்தமான நீர் தேக்கம்
/
ஊருணியில் அசுத்தமான நீர் தேக்கம்
ADDED : ஆக 29, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : ஊருணியில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தபட்டது.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் மூன்று ஊருணிகள் உள்ளன.
இதில் மரைக்காயர் ஊருணியை பெண்களும், அய்யாகுளம் மற்றும் புதுக்குளம் ஊருணிகளை ஆண்களும் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஊருணிகளில் தேங்கியுள்ள நீரின் தன்மை மாறி, துர்நாற்றமாக உள்ளது. எஸ்.பி.பட்டினம் ஹபீப் முகமது கூறியதாவது: நீரின் தன்மை மாறிவிட்டதால் துர்நாற்றமாக உள்ளது. நோய் பரவும் அபாயம் இருப்பதால் நீரை வெளியேற்ற சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

