/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு பணிகளுக்கான தொகை வேண்டி காத்திருக்கும் ஒப்பந்ததாரர்கள்

ADDED : ஜூன் 06, 2024 05:48 AM
கடலாடி: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நடப்பு ஆண்டில் டிச.,க்குள் பதவி காலம் நிறைவடைவதால் திட்டப் பணிகளுக்கான தொகையை பெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் கடலாடி மற்றும் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் வேலை நாட்களில் குவிகின்றனர்.
ஊராட்சிகளில் கான்கிரீட் ரோடு, தடுப்பணை, பேவர் பிளாக் ரோடு, தார் ரோடு, பாலம் வேலைகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு கலெக்டர் அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் மூலம் ஒப்பந்தப் புள்ளிகள் பெற்று ஒப்பந்ததாரர்கள் பணியை முடித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் வரவேண்டிய தொகையை பெறுவதில் ஒப்பந்ததாரர்களும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், பொதுவாக ஊராட்சிகளின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன் உரிய முறையில் செட்டில் செய்ய வேண்டும். பெரும்பாலான பணிகளுக்கு பெரிய தொகை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் பெற்றாக வேண்டும்.
பதவிக்காலம் முடிந்து தனி அலுவலர் அல்லது புதிய ஊராட்சி மன்றம் அமைந்தால் கிடப்பில் உள்ள திட்டப்பணி தொகையை பெறுவதில் சிரமமும், தொய்வும் ஏற்படும். வரக்கூடிய ஊராட்சித் தலைவர்களுக்கு திட்டத்தின் நோக்கம் பற்றி மீண்டும் விளக்க வேண்டும் என்றார்.