/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஆக 03, 2024 08:13 PM
ராமநாதபுரம்:கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர்கள் 354 பேருக்கு சார் - பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் சீனியாரிட்டி பின்பற்றப்படாதது, வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்துள்ளதை கண்டித்தும் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கொத்தளிப்பில் உள்ளனர்.
சீனியாரிட்டி, இட ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றவும், மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்கப்பட்ட இட மாறுதலை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன், ஆக., 1ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட இணைப் பதிவாளர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம், சென்னை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்க மாநில செயலர் வினோத் ராஜா தெரிவித்தார்.