ADDED : ஆக 06, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க 38 வது அமைப்பு தினம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் திருலோகசந்தர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலாஜி வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் சங்க கொடி ஏற்றினார். முன்னாள் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கங்காதரன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.கூட்டுறவுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
