ADDED : ஜூலை 04, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி கண்ணார்பட்டியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி சரக துணைப்பதிவாளர் ரத்தின வேலு தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பொது மேலாளர் போஸ் வரவேற்றார்.
பொதுமக்களிடையே கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையிலும், நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களை கூட்டுறவு சங்கங்களில் புகுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களை அதிகாரிகள் விளக்கினர். நிகழ்ச்சியில் கமுதி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
