/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு பணியாளர் குறை தீர்க்கும் முகாம்
/
கூட்டுறவு பணியாளர் குறை தீர்க்கும் முகாம்
ADDED : செப் 14, 2024 01:59 AM
---------ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த கூட்டுறவு பணியாளர் குறை தீர்க்கும் நாள் முகாமில் 20 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மண்டல அளவில் செயல்படும் கூட்டுறவு சங்க பணியாளர் குறை தீர்க்கும் முகாம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு அறிவுரையின் படி கூட்டுறவு பணியாளர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர், ராமநாதபுரம், பரமக்குடி துணைப்பதிவாளர்கள் முன்னிலையில் நடந்தது.
இதில் 20 மனுக்கள் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்டன. 2 மாதங்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என மண்டல இணைப்பதிவாளர் ஜீனு தெரிவித்துள்ளார்.