ADDED : மார் 28, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள்குறித்து மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஹீராராம்சவுத்ரி ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட லோக்சபா தேர்தல் செலவினபார்வையாளராக ஹீராராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில்தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறை ஆகியஇடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
அரசியல் கட்சிகள் ஊடக விளம்பரம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்க வேண்டும். மக்கள் புகார் தெரிவித்தால் அதன் பேரில்உடனியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹீராராம் சவுத்ரிஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

