/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் 11 ஆழ்துளை கிணறுகளில் 4 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது கவுன்சிலர்கள் புகார்
/
கீழக்கரை நகராட்சியில் 11 ஆழ்துளை கிணறுகளில் 4 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது கவுன்சிலர்கள் புகார்
கீழக்கரை நகராட்சியில் 11 ஆழ்துளை கிணறுகளில் 4 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது கவுன்சிலர்கள் புகார்
கீழக்கரை நகராட்சியில் 11 ஆழ்துளை கிணறுகளில் 4 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஆக 01, 2024 04:22 AM
கீழக்கரை: -கீழக்கரை நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது. நகராட்சியில் புதிதாக அமைத்த 11 ஆழ்துளை கிணறுகளில் ஏழு செயல்படவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கீழக்கரை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கணக்காளர் உதயகுமார் வரவேற்றார். தீர்மானங்களை கணக்காளர் தமிழ்ச்செல்வன் வாசித்தார். கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
சூரியகலா: கீழக்கரை நகராட்சி பஸ்ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள வளாகத்தில் பழைய மீன் மார்க்கெட் கடையை இடிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். சேதமடைந்த கடைகளால் விபத்து அபாயம் உள்ளது. எனவே அங்கே இருக்கும் கடைகளை இடித்து அகற்றுவதே பாதுகாப்பானதாக இருக்கும் என்றார்.
தலைவர்: விரைவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து கடைகள் இடிக்கப்படும்.
உம்மு சல்மா: 12வது வார்டில் கழிவு நீர் வாறுகாலில் மூடிகள் இல்லாமல் குப்பை விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் பல நாட்களாக செல்கிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஹமீது சுல்தான், துணைத் தலைவர்: வாறுகால் மூடி தற்போது ஸ்டாக் இல்லை. விரைவில் மூடி ஏற்பாடு செய்து வாறுகால் மூடி போடப்படும்.
தலைவர்: நகராட்சியில் போதிய நிதியாதாரம் இல்லாததால் பல்வேறு அத்தியாவசிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.வரி வசூல் செய்து நிலைமையை சீராக்குவோம்.
சுஐபு: கடைகளுக்கான வரியை முறையாக வசூல் செய்தாலே ஓரளவுக்கு நிதி ஆதாரத்தை அதிகரிக்கலாம். வரி வசூல் செய்வோர் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
சப்ரஸ் நவாஸ்: சமீபத்தில் வள்ளல் சீதக்காதி சாலையில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிழக்குத் தெரு எதிர்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள். கடைத்தெருவுக்குள் ஆட்டோவில் போய் வந்த காலம் மாறி தற்போது டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன. இதை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா: விரைவில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கும்.
சேக் உசேன்: நகராட்சியில் நிதி நிலைமை மோசமாக உள்ளது என தெரிவிக்கிறீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாமே. 11 ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு கொடுத்துள்ளீர்கள். இதில் நான்கு மட்டுமே வேலை செய்கிறது. மீதமுள்ள ஏழு வேலை செய்யவில்லை. இன்னும் அந்த ஏழு கிணற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் ஏன். வார்டுகளுக்கான தேவைகள் இடம் பெறவில்லை.
பாதுஷா: கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலக ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. எனவே கீழக்கரை நகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி சீரமைக்க வேண்டும் என்றார்.