நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை நகர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களிடம் மண்ணில் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பை உபயோகத்தை தவிர்த்து துணிப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி தலைமை வகித்தார்.
வார்டு கவுன்சிலர் சேக் உசேன், முன்னாள் கவுன்சிலர் அன்வர் அலி, ஜெய்னுதீன், நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், மக்கள் டீம் காதர் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா செய்திருந்தார்.