/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடும் வெப்பத்தில் தப்பிக்க கடல் நீரில் இறங்கும் மாடுகள்
/
கடும் வெப்பத்தில் தப்பிக்க கடல் நீரில் இறங்கும் மாடுகள்
கடும் வெப்பத்தில் தப்பிக்க கடல் நீரில் இறங்கும் மாடுகள்
கடும் வெப்பத்தில் தப்பிக்க கடல் நீரில் இறங்கும் மாடுகள்
ADDED : ஜூன் 16, 2024 01:56 AM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பத்திற்கு கால்நடைகளும் பாதிப்படைந்துள்ள நிலையில் வெப்பத்திலிருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ள கால்நடைகள் கடல் நீரில் பல மணி நேரம் நின்று விட்டு மாலையில் கரை திரும்புகின்றன.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை உப்பூர், மோர்ப்பண்ணை, கடலுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்க்கின்றனர். கால்நடைகளை காலையில் மேய்ச்சலுக்கு வயல் வெளிகளில் அவிழ்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக மோர்ப்பண்ணை கடற்கரை பகுதிக்குச் சென்று குறிப்பிட்ட தொலைவு கடல் நீரில் மாடுகள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே கடல் நீரில் நின்று வருகின்றன. காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை கால்நடைகள் கடல் நீரிலேயே நிற்கின்றன. பின் கரைக்கு திரும்பி வயல்வெளிகளுக்கு மேய்ச்சலுக்கு செல்கின்றன.
இது கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்து வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக நிலவும் கடும் வெப்பத்தால் மாடுகள் வெப்பத்திலிருந்து தப்பிக்க கடல் நீரில் இறங்கி தங்களை குளிர்ச்சியாக்கி கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.