ADDED : ஏப் 27, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு முகாம் இன்று (ஏப்.27ல்) கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
பங்கேற்போர் 2010 செப்.,1 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் தேர்வில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 94431 12678 தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

