ADDED : ஜூலை 31, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் அட்மா திட்டத்தில் பண்ணைப்பள்ளி, பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண் உதவி இயக்குநர் தமிழ் அகராதி தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்து செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளத்தை மேம்படுத்து முடியும். பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுவதால் வரப்பு பயிர்களாக தட்டைப்பயறு,சோளம், ஆமணக்கு பயிரிடுவதால் தாக்குதலை குறைக்க முடியும் என்றார். பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.
