/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் வரத்தின்றி வெள்ளரிப்பழம் விலை ரூ.40
/
ராமநாதபுரத்தில் வரத்தின்றி வெள்ளரிப்பழம் விலை ரூ.40
ராமநாதபுரத்தில் வரத்தின்றி வெள்ளரிப்பழம் விலை ரூ.40
ராமநாதபுரத்தில் வரத்தின்றி வெள்ளரிப்பழம் விலை ரூ.40
ADDED : ஏப் 18, 2024 05:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளரி பிஞ்சுகளுடன், வெள்ளரி பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.விளைச்சல் குறைவால் அதிகபட்சமாக பழம் ஒன்று ரூ.40 வரை விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய், ஊருணியை ஒட்டியுள்ள இடங்களில் வெள்ளரி சாகுபடி நடக்கிறது.
வெள்ளரியை தனிப்பயிராகவும், சிலர் பருத்தி, பயறு வகைகளில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்துள்ளனர்.
ஏப்., மே, ஜூன் மாதங்களில்வெள்ளரி விளைச்சல் அதிகரிக்கும்.
தற்போது சீசன் துவங்கிய நிலையில் வெள்ளரி பழம் என அழைக்கப்படும் சம்பார் வெள்ளரி வரத்து குறைந்துள்ளது. ராமநாதபுரம் சந்தை, மீன்மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பருமனுக்கு ஏற்றவாறு வெள்ளரி பழம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கின்றனர்.
உடல் சூட்டை தணிக்கும் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.----