/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு ஆமணக்கு செடி வளர்ப்பு
/
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு ஆமணக்கு செடி வளர்ப்பு
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு ஆமணக்கு செடி வளர்ப்பு
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு ஆமணக்கு செடி வளர்ப்பு
ADDED : மே 30, 2024 03:12 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் சோதனை முறையில் ஆமணக்கு செடிகள் வளர்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவரியாக நெல் சாகுபடி, பருத்தி, மிளகாய் சாகுபடி நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் ஆமணக்கு செடிகளை வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக கலெக்டர் அலுவலக வளாகம் கடலோர உவர் ஆராய்ச்சி மையம், குயவன்குடி அறிவியல் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களில் சோதனை அடிப்படையில் ஆமணக்கு செடிகள் மானாவாரியாக வளர்க்கப்படுகிறது.
கடலோர உவர் ஆராய்ச்சி மையம் திட்டப் பொறுப்பாளர் வள்ளல் கண்ணன் கூறுகையில், நாமக்கல், வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் அடர்முறையில் வளரும் ஆமணக்கு செடிகளை சோதனை அடிப்படையில் வளர்க்கிறோம்.
மூன்று மாதங்களில் நன்றாக வளர்ந்து காய்க்கத் துவங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.10ஆயிரம்செலவாகும். 2.5 ஏக்கரில் 1000 கிலோ ஆமணக்கு விதை எடுக்கலாம். கிலோவிற்கு ரூ.40 முதல் ரூ.60க்கு விற்று நல்ல லாபம் பெறலாம்.
ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டால் அடர்முறையில் ஆமணக்கு செடிகள் வளர்ப்பு முறை, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.