/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்
/
கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்
ADDED : மே 22, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் விழாவில் கத்தியால் உடலில் கீறலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே நீராவி கிராமத்தில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கரக உற்ஸவம் மே 19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக கரகத்துடன் காப்பு கட்டிய பக்தர்கள் உடலில் சந்தனம் பூசி கத்தியால் கீறலிட்டு நேற்று முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
பின் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கரக உற்ஸவத்தில் 200க்கும் மேற்பட்டோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

