/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் சூறாவளி படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி
/
ராமேஸ்வரம் கடலில் சூறாவளி படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி
ராமேஸ்வரம் கடலில் சூறாவளி படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி
ராமேஸ்வரம் கடலில் சூறாவளி படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி
ADDED : ஜூன் 16, 2024 01:54 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு சூறாவளி காற்றில் சிக்கி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர்.
மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் மண்டபம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் ஆரோக்கியம் 58, பரக்கத்துல்லா 59, கலீல் ரகுமான் 45, பிரசாத் 35, முகமது ஹனிபா 40, ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
மண்டபத்தில் இருந்து 6 கடல் மைல் துாரத்தில் மீன்பிடித்த போது சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலையில் படகு சிக்கியது. அடிப்பகுதியில் பலகை உடைந்து கடல்நீர் புகுந்ததால் படகு மூழ்கியது.
இதில் இருந்த 5 பேரும் கடலில் குதித்து நீந்தியபடி உயிருக்கு போராடினர். சிறிது நேரத்திற்கு பின் அவ்வழியாக மீன் பிடித்த மற்றொரு படகின் மீனவர்கள் பிரசாத், முகமது ஹனிபாவை மீட்டு நேற்று காலை மண்டபம் கரையில் சேர்த்தனர்.
ஆரோக்கியம், பரக்கத்துல்லா உடலை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு மீனவர் கலீல்ரகுமான் உடலை தேடி வருகின்றனர்.
தடை காலம் முடிந்து 60 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளில் 2 மீனவர்கள் பலியான சம்பவம் மீனவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.