/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி: ராமேஸ்வரம் அருகே ஆழ்கடல் படகு கரை ஒதுங்கியது
/
சூறாவளி: ராமேஸ்வரம் அருகே ஆழ்கடல் படகு கரை ஒதுங்கியது
சூறாவளி: ராமேஸ்வரம் அருகே ஆழ்கடல் படகு கரை ஒதுங்கியது
சூறாவளி: ராமேஸ்வரம் அருகே ஆழ்கடல் படகு கரை ஒதுங்கியது
ADDED : அக் 06, 2024 01:44 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் விசைப்படகு நங்கூரம் கயறு அறுந்து கரை ஒதுங்கியது.
ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறாவளிக் காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.
இதனால் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் தொழில் நஷ்டத்தால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த தங்கச்சிமடம் மீனவர் ரெய்சில் என்பவரது ஆழ்கடல் விசைப்படகின் நங்கூரக் கயறு அறுந்து கரை ஒதுங்கியது.
இப்படகை இரண்டு படகுகளில் சென்று மீட்கும் பணியில் மீனவர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் மானியம், மீனவர்கள் பங்களிப்புடன் வாங்கிய ஆழ்கடல் படகில் மீன்வரத்து இன்றி தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் படகை பல மாதங்களாக நிறுத்தி வைத்த நிலையில் தற்போது சூறாவளியால் கரை ஒதுங்கி சேதமடைந்துள்ளது.
எனவே தங்கச்சிமடத்தில் துாண்டில் வளைவு பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கத் தலைவர் சகாயம் தெரிவித்தார்.