/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி, இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் முடக்கம் மீனவர்கள் வேதனை

ADDED : செப் 12, 2024 12:30 AM

ராமேஸ்வரம்:மீன்கள் இனப்பெருக்க காலத்திற்கு பின் ஜூன் 15 முதல் தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பை துவக்கினர். இதில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள 1500 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கின்றனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல், சிறைபிடிப்பால் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்கின்றனர். தற்போது தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்து சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்களுக்கு பல நாட்கள் மீன்துறை தடை விதித்தது.
ஜூன் 15 முதல் நேற்று வரை 39 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய மீனவர்கள் 16 நாட்கள் மட்டுமே சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியதாவது: மீன்பிடி தடை காலத்திற்கு பின் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தொழில் முடங்கியதால் வாழ்வாதாரம் இழந்து கடன் தொல்லையில் சிக்கி உள்ளோம்.
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தாமல் அலட்சியமாக உள்ளது. இதனால் வேலை தேடி கன்னியாகுமரி, கேரளாவில் தஞ்சம் அடையும் அவலம் உள்ளது என்றனர்.