/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலட்டாற்று படுகையில் சீமை கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
மலட்டாற்று படுகையில் சீமை கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மலட்டாற்று படுகையில் சீமை கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மலட்டாற்று படுகையில் சீமை கருவேல மரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மே 07, 2024 11:13 PM
சாயல்குடி, : சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் பகுதியில் மலட்டாற்று படுகையில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்.
கடந்த 2019ல் ரூ.3 கோடியில் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பாலம் அருகே மலட்டாறில் தடுப்பணை அமைக்கப்பட்டது. 300 மீ., நீளத்தில் ஆறு அடி உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டாலும், ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தடுப்பணையை தாண்டி மாறுகால் பாயும் வெள்ள நீர் மூக்கையூர் கடலில் கலந்து வீணாகி வருவது வாடிக்கையாக நிகழ்கிறது.
மலட்டாற்று படுகையில் கடலாடி செல்லும் வழியில் இருந்து 7 கி.மீ.,க்கு ஆற்றுப் படுகை முழுவதும் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகளவு உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: மலட்டாற்று படுகையில் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் முழுவதுமாக சேமிக்க இயலாமல் தடுப்பணையின் மறுகால் பாய்வது தொடர்கிறது. எனவே தடுப்பணையின் உயரத்தை சில மீ., அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மலட்டாற்றின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றுப்படுகையில் நடுப் பகுதியில் பல இடங்களில் அனுமதியின்றி மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. கட்டுப்படுத்த வருவாய்த்துறை, கனிமவளத் துறையினரும், போலீசாரும் உரிய முறையில் ரோந்து செல்ல வேண்டும். பொதுப்பணித்துறை கண்மாய்க்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து கோடை காலத்தில் மராமத்து பணிகளை செய்தால் மலட்டாற்றில் தேங்கும் தண்ணீரால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

