/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பவுண்ட் கடை வீதியில் ரோடு மாயம் ஆக்கிரமிப்பால் தினமும் நெரிசல்
/
பவுண்ட் கடை வீதியில் ரோடு மாயம் ஆக்கிரமிப்பால் தினமும் நெரிசல்
பவுண்ட் கடை வீதியில் ரோடு மாயம் ஆக்கிரமிப்பால் தினமும் நெரிசல்
பவுண்ட் கடை வீதியில் ரோடு மாயம் ஆக்கிரமிப்பால் தினமும் நெரிசல்
ADDED : ஜூலை 01, 2024 05:43 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பவுண்ட் கடை வீதி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியான பவுண்ட் கடை வீதியில் ஏராளமான மொத்த வியாபாரக்கடைகள், குடோன்கள் உள்ளன. இப்பகுதியில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சரக்கு வாகனங்கள் உள்ளே வந்து செல்ல வேண்டும். நகராட்சி, போலீசாரின் பெயரளவு நடவடிக்கையால் பாதிரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
மேலும் சரக்கு வாகனங்கள் உள்ளே வரும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி வியாபாரிகள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பவுண்ட் கடை வீதியில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.