/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நான்கு வழிச் சாலையோர வடிகால் மூடிகள் சேதம்
/
நான்கு வழிச் சாலையோர வடிகால் மூடிகள் சேதம்
ADDED : மார் 03, 2025 05:31 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் மூடிகள் உடைந்துள்ளதால் விபத்து அச்சம் உள்ளது.
பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் மதுரை, ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை குறுக்கிடுகிறது.
இதேபோல் மாநில நெடுஞ்சாலை மற்றும் கண்மாய்களை கடக்க நான்கு வழிச் சாலைகளில் பிரம்மாண்டமான மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருபுறங்களிலும் உள்ள விலக்கு ரோடுகளில் மழை நீர் வடிய நீண்ட துாரம் வடிகால் வசதி செய்யப்பட்டது. இதன் மீது கம்பி கட்டப்பட்டு கான்கிரீட் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடங்களில் சிமென்ட் சிலாப்புகள் ஒட்டுமொத்தமாக உடைந்து நொறுங்கி உள்ளது.
இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி வடிகால் கண்ணில் தெரியாதபடி இருக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் கால்நடைகள் அவ்வப்போது பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் நிகழ்கிறது.
எனவே நான்கு வழிச்சாலையோர வடிகால்களை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.