/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரம் உள்ள தடுப்புவேலி சேதம்
/
ரோட்டோரம் உள்ள தடுப்புவேலி சேதம்
ADDED : ஜூலை 05, 2024 10:41 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார்- - ராமநாதபுரம் ரோடு காக்கூர் சோலைபுரம் அருகே ரோட்டோரத்தில் உள்ள சிறு பாலம் அருகேதடுப்புவேலி சேதமடைந்துள்ளது.
காக்கூர் சோலைபுரம் அருகே தண்ணீர் செல்வதற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டோரத்தில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்புவேலி அமைக்கப்பட்டது. முதுகுளத்துார்- -ராமநாதபுரம் ரோடு அகலப்படுத்துவதற்காக புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடந்தது. அப்போது காக்கூர் சோலைபுரம் சிறுபாலம் அருகே இருந்த தடுப்புவேலி சேதமடைந்தது.
இரு மாதத்திற்கு முன்பு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது வரை சிறுபாலம் அருகே தடுப்புவேலி மீண்டும் அமைக்கப்படாமல் விவசாய நிலத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது.
இதனால் இரவு நேரம் வளைவில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.