/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேந்தோணியில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
/
வேந்தோணியில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
ADDED : மே 07, 2024 11:16 PM

பரமக்குடி : - பரமக்குடி பகுதிகளில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ள நிலையில் சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் கல்வியில் ஊக்கம் அளிக்கும் வகையில் குழந்தை பருவம் முதல் சத்தான உணவுகளை வழங்குவதுடன் பள்ளிகளின் கட்டமைப்பும் அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் கொள்ளாமல் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அந்த வகையில் ஒன்றிய பள்ளிகளில் மாணவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் மற்றும் பந்து உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உபகரணங்கள் தரமின்றி உள்ளதால் விரைவில் வீணாகிறது. எனவே மாணவர்கள் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை விடுமுறை காலங்களில் சீரமைக்க வேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

