/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அபாயம்
/
ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அபாயம்
ADDED : ஏப் 20, 2024 04:52 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை, திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி டவுன் பகுதிகளிலும், கடந்த சில மாதங்களாக ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரைசாலைப் பகுதிகளில் திடீரென கால்நடைகள் ரோட்டில் குறுக்கிடுவதால் கால்நடைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துக்களில் சிக்கி வருகின்றன.
ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கால்நடைகள் ரோட்டில் குறுக்கே சுற்றித் திரிகின்றன. இதனால் டூவீலர் ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிகின்றனர்.
எனவே, ரோடுகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

