/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் சேதமடைந்த தகவல் பலகையால் ஆபத்து
/
தனுஷ்கோடியில் சேதமடைந்த தகவல் பலகையால் ஆபத்து
ADDED : ஜூன் 01, 2024 04:21 AM

ராமேஸ்வரம்,: -தனுஷ்கோடியில் இரும்பு தகவல் பலகை சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்குவிபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனுஷ்கோடியில் புயலில் இடிந்த சர்ச் முன்பு தேசிய நெடுஞ்சாலை மேலே இரும்பு தகவல் பலகை உள்ளது.
இந்த பலகையில் தனுஷ்கோடி சர்ச், அரிச்சல்முனைக்கு செல்லும் துாரம் மட்டுமே உள்ளது. சர்ச் முன்பு வைத்துள்ள இத்தகவல் பலகையால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை.
இங்குள்ள இரும்பு தகவல் பலகையும் உப்புக் காற்றில் துருப்பிடித்து சேதமடைந்து பாதி முறிந்து கீழே விழுந்தது. மீதமுள்ள இரும்பு பலகையும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் மீதோ விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே துருப்பிடித்துஉள்ள இரும்பு தகவல் பலகையை அகற்றி புதிய பலகை பொருத் தமிழக சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.