/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிழற்குடை பயணிகள் பாதிப்பு
/
ஆபத்தான நிழற்குடை பயணிகள் பாதிப்பு
ADDED : மார் 10, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ., உள்ளது சித்திரங்குடி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காலை, மாலை நேரத்தில் மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மரத்தடியில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.