/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 50 ஆண்டு கடந்த நகராட்சி படிப்பகத்தில் இருள்; குப்பையால் அசுத்தம்

ADDED : மார் 26, 2024 11:46 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான படிப்பகம் 1973ல் கட்டப்பட்டது. தொடர்ந்து நகராட்சி படிப்பகம் உட்பட அப்பகுதி துப்புரவுப் பணியாளர்கள் அலுவலகம் மற்றும் சுகாதார வளாகம் இங்கு செயல்படுகிறது.
படிப்பகம் காற்றோட்டமான விசாலமான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளிதழ்கள் தினமும் வாங்கப்பட்டு காலை முதல் இரவு வரை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை படிக்கின்றனர்.
மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகின்றவர்களும் அமைதியான சூழலை கருத்தில் கொண்டு இங்கு படிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக மின் விசிறிகள் செயல்படாமல் உள்ளது. இங்குள்ள இரண்டு டியூப் லைட்டுகளில் ஒன்று மட்டும் எரிந்த நிலையில் இரண்டு நாட்களாக அதுவும் பியூஸ் போனது.
தொடர்ந்து தேவையற்ற குப்பை தேங்கி துாசு மண்டலமாகி வருகிறது.
படிப்பகம் காலை 6:00 மணிக்கு துவங்கி மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை செயல்பட வேண்டும்.
ஆனால் போதிய வெளிச்சம் இல்லாமல் கோடை காலமாக இருப்பதாலும் இங்கு வரும் வாசகர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
படிப்பகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.