/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பார்வையாளர் ராமேஸ்வரத்தில் தரிசனம்
/
தேர்தல் பார்வையாளர் ராமேஸ்வரத்தில் தரிசனம்
ADDED : மார் 22, 2024 10:40 PM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா வந்த திண்டுக்கல் மாவட்ட தேர்தல் செலவீனம் கணக்கு பார்வையாளர் விகாஸ் சிங், புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.
ஒரிரு நாட்களுக்கு பின் எம்.பி., தேர்தலுக்கான பிரசாரம் வேட்பாளர்களிடையே சூடுபிடிக்க துவங்கி விடும். வேட்பாளர்களின் செலவீனம், பிரசார பாணி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுத்து கண்காணிக்க தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக அதிகாரிகளை நியமித்துள்ளது.
திண்டுக்கல் தொகுதிக்கு வேட்பாளர் செலவு கணக்கு பார்வையாளராக பொறுப்பேற்ற விகாஸ் சிங், நேற்று உறவினர்களுடன் இரு கார்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தார். இவர் குடும்பத்துடன் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு கோவிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதியில் தரிசனம் செய்தார்.

