/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ம.பி., முதல்வர் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ம.பி., முதல்வர் தரிசனம்
ADDED : ஜூன் 02, 2024 02:39 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடியில் ராமர் பாலத்தை ம.பி., முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
நேற்று மதியம் 2:10 மணிக்கு ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஹெலிகாப்டரில் ம.பி., முதல்வர் ,அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்திறங்கினார். பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்ற ம.பி., முதல்வர், இலங்கைக்கு ராமர் அமைத்த ராம்சேது பாலத்தை வணங்கி தரிசனம் செய்தார். பின் மாலை 4:10 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த முதல்வரை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் வரவேற்றார்.
கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் முதல்வர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின் காரில் மண்டபம் சென்ற முதல்வர் மாலை 5:10 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை சென்றார்.
முன்னதாக முதல்வர் மோகன் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடியில் ராமர் அமைத்த பாலத்தை தரிசனம் செய்ததைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 3வது முறையாக மீண்டும்பிரதமர் மோடி வர வேண்டி பிரார்த்தனை செய்தேன். மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார் என்றார்.