sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விடிய விடிய கள்ளழகர் நடத்திய தசாவதார நிகழ்ச்சி; நாளை கோயிலுக்கு திரும்புகிறார்

/

விடிய விடிய கள்ளழகர் நடத்திய தசாவதார நிகழ்ச்சி; நாளை கோயிலுக்கு திரும்புகிறார்

விடிய விடிய கள்ளழகர் நடத்திய தசாவதார நிகழ்ச்சி; நாளை கோயிலுக்கு திரும்புகிறார்

விடிய விடிய கள்ளழகர் நடத்திய தசாவதார நிகழ்ச்சி; நாளை கோயிலுக்கு திரும்புகிறார்


ADDED : ஏப் 26, 2024 12:46 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைதிருவிழாவில் அழகர் தசாவதார சேவையில் விடிய விடிய அருள்பாலித்தார். தொடர்ந்து நாளை மாலை 6:00 மணிக்கு கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

பரமக்குடி சுந்தரராஜபெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஏப்.18 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. ஏப்.22ல் அழகருக்குசிறப்பு அபிஷேகம் நடந்து ஏப்.23 அதிகாலை 3:30 மணிக்கு வைகையில் இறங்கினார்.

அன்று காலை 10:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அழகரை பல ஆயிரம்பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். ஏப்.24 அதிகாலை 3:30 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார்.

மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடாகி இரவு 10:00 மணிக்கு மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் இரவு 2:00 மணி துவங்கி வாணியர் மண்டகப்படியில் அர்ச்ச அவதாரம், மச்சம், கூர்மம், வாமன, பரசுராமர், ராமர், பலராமர் அவதாரம் எடுத்தார். பின்னர் அதிகாலை 5:30 மணிக்கு மோகனி அவதாரத்தில் வைகை ஆற்றில் உலா வந்தார்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தரிசித்து சென்றனர். நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் பெரிய திருவடியான கருட வாகனத்தில் அமர்ந்து மட்டா மண்டகப்படியை அடைந்தார்.

இன்று அழகர் ராஜாங்க திருக்கோலத்தில் பட்டு பல்லக்கில் கிரி மண்டகப்படியில் சேவை சாதிக்கிறார். நாளை காலை 7:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் அமர்ந்து நகர் முழுவதும் வலம் வருகிறார்.

மாலை 6:00 மணிக்கு ஆஸ்தானத்தை அடையும் அழகர் சிறப்பு தீபாராதனைக்கு பின் கண்ணாடி சேவையில் அருள்பாலிக்கிறார்.

ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us