/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனு எழுத ரூ.1500 கொடுத்து ஏமாந்த மூதாட்டி கண்ணீர்
/
மனு எழுத ரூ.1500 கொடுத்து ஏமாந்த மூதாட்டி கண்ணீர்
ADDED : செப் 05, 2024 02:37 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் செப்., 2 நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு எழுதித்தர ரூ.1500 பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக மூதாட்டி குஞ்சரத்தம்மாள் 80, கண்ணீர் விட்டார்.
நிலப்பிரச்னை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க ராமநாதபுரம் அருகே தொருவளூரைசேர்ந்த ராமசாமி மனைவி குஞ்சரம்மாள் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை மனுக்களை எழுதி தரும் பணியில் தனி நபர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் மனு எழுதித்தருவதாக குஞ்சரம்மாளிடம் கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும் அவரிடம் ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பிய அவரிடமிருந்து ஆவணங்கள், ரூ.1500 வசூலித்தார். ஆனால் தன் கோரிக்கை எதுவும்நிறைவேறாததால் மனு எழுதி கொடுத்த நபரை தேடி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு குஞ்சரம்மாள் வந்தார். அவரை காணாததால் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாககதறினார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பினர்.
இதுபோன்று மனு எழுதி கொடுத்து அதிகாரிகளிடம் பேசி காரியம் செய்து கொடுப்பதாக ஏமாற்றுவது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து நடக்கிறது. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.