/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டில் துண்டிக்கப்பட்ட கால்கள் வேட்டையாடப்படுகிறதா மான்கள்
/
காட்டில் துண்டிக்கப்பட்ட கால்கள் வேட்டையாடப்படுகிறதா மான்கள்
காட்டில் துண்டிக்கப்பட்ட கால்கள் வேட்டையாடப்படுகிறதா மான்கள்
காட்டில் துண்டிக்கப்பட்ட கால்கள் வேட்டையாடப்படுகிறதா மான்கள்
ADDED : ஜூலை 16, 2024 05:53 AM

கமுதி, : கமுதி கல்லுப்பட்டி காலனி அருகே மானின் கால்கள் துண்டாகிக் கிடந்த நிலையில் அவை வேட்டையாடப்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமுதி பகுதியில் குண்டாறு அதனை சுற்றியுள்ள கண்மாய் காட்டுப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்கின்றன. தற்போது குண்டாறு அதனை ஒட்டியுள்ள கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் சில சமயங்களில் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
இதில் கமுதி அருகே கிராமங்களில் நாய்கள் கடித்து ஏராளமான மான்கள் உயிரிழந்துள்ளன. கமுதி கோட்டைமேட்டில் இருந்து கல்லுப்பட்டி காலனி செல்லும் ரோட்டருகே மானின் கால்கள் துண்டு துண்டாக கிடந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கமுதி கல்லுப்பட்டி அருகே மானின் கால்கள் துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளன. குண்டாறு ஒட்டியுள்ள பகுதிகளில் உலாவரும் மான்கள் வேட்டையாடப்படுகிறதா அல்லது நாய்களுக்கு இரையாக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. வனத்துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மான்கள் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.