ADDED : பிப் 27, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே நெய்வயல் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கிறது. நேற்று காலை 10:00 மணிக்கு  கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளிமான் வயல் காட்டு வழியாக சென்றது.
அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

