ADDED : ஏப் 12, 2024 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் கண்மாயில் ஏராளமான மான்கள் வாழ்கின்றன. நேற்று அதிகாலை கண்மாயிலிருந்து வெளியேறிய மான் ரோட்டிற்கு வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
இரண்டு வயதுள்ள அந்த மானுக்கு உடலில் அடிபட்ட காயங்கள் இருந்தன. வனத்துறையினர் சென்று உடல் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மானை புதைத்தனர்.

