/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையம் முன் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை தேர்தலை புறக்கணிக்க திட்டம்

ADDED : ஏப் 10, 2024 05:50 AM
ராமநாதபுரம் : தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தேவேந்திரகுல வேளாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேவிபட்டினம் காந்திநகர் கிராம தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:
தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் 1973 ல் திறக்கப்பட்டது. அருகே உள்ள காந்திநகர், தோப்புக்காடு, உலகம்மன் கோவில் தெரு, ஆர்.சி., தெரு ஆகிய இடங்களில் 5000 மக்கள் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல 51 ஆண்டுகளாக போராடுகிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே பஸ்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்து உறுதி கூறும் வரை போராடுவோம் என்றார்.