/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
/
சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 04:39 AM

ராமநாதபுரம் : திருப்பாலைக்குடியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி எழுவராஜா 50, சவுதி அரேபியாவில் இறந்து விட்டார். அவரது உடலை ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த எழுவராஜா மனைவி கற்பகவள்ளி, ஊர் மக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் திருப்பாலைக்குடி எழுவராஜா 50, சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடி கூலியாக பணி புரிந்தார். அவர் ஆக.7 ல் இறந்து விட்டார். உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். கணவரை இழந்து 4 குழந்தைகளுடன் சிரமப்படும் கற்பகவள்ளி குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.