/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
/
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 10:29 PM
தொண்டி:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.
நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்தனர். இதில் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த ஆறு மீனவர்களும் அடங்குவர்.
நாட்டுப்படகு மீனவர் சங்க மாநில பொருளாளர் ஆறுமுகம் கூறுகையில், நம்புதாளையை சேர்ந்த படகின் உரிமையாளர் பெரியசாமி 56, குமரன் 39, பாண்டி 39, பழனி 40, ராமமூர்த்தி 34, ஆறுமுகம் 44, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றார்.