/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவுதியில் இறந்த மீனவர் உடலை மீட்டு ரூ. 10 லட்சம் நிதி வழங்க வலியுறுத்தல்
/
சவுதியில் இறந்த மீனவர் உடலை மீட்டு ரூ. 10 லட்சம் நிதி வழங்க வலியுறுத்தல்
சவுதியில் இறந்த மீனவர் உடலை மீட்டு ரூ. 10 லட்சம் நிதி வழங்க வலியுறுத்தல்
சவுதியில் இறந்த மீனவர் உடலை மீட்டு ரூ. 10 லட்சம் நிதி வழங்க வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2024 07:41 AM

ராமநாதபுரம் சவுதி அரபியாவில் அந்நாட்டு படகு மோதி பலியான மோர்பண்ணை மீனவர் மருதமலை உடலை மீட்டு அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கடல் தொழிலாளர்கள், உறவினர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை மீனவ கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், மோர்பண்ணை மீனவர் மருதமலை 40. இவர் பக்ரைனில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றார்.
அங்கு ஆக.5ல் மீன்பிடித்த போது சவுதி அரேபிய கடற்படையினர் மீனவர்கள் தங்கள் கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கருதி அவர்களை கைது செய்யும் நோக்கில் விரட்டினர்.
அப்போது சவுதி கடற்படை கப்பல் மீனவர்கள் சென்ற பைபர் படகில் மோதி படகை மூழ்கடித்தது. இதில் மருதமலை கடலில் மூழ்கி இறந்தார். மற்ற மீனவர்கள் உயிர் தப்பினர்.
மருதமலைக்கு மனைவி விஜயசாந்தி 32, இரண்டு பெண் குழந்தைகள், தாயார் கண்ணாத்தாள் உள்ளனர்.
மருதமலையின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த ஏழை மீனவர் குடும்பத்திற்கு கருணையுடன் முதல்வரின் பொது நிவாரண நிதியில்இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர துரித நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.