/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கரை வலை மீனுக்கு கிராக்கி: கிலோ ரூ.400
/
ராமேஸ்வரத்தில் கரை வலை மீனுக்கு கிராக்கி: கிலோ ரூ.400
ராமேஸ்வரத்தில் கரை வலை மீனுக்கு கிராக்கி: கிலோ ரூ.400
ராமேஸ்வரத்தில் கரை வலை மீனுக்கு கிராக்கி: கிலோ ரூ.400
ADDED : ஏப் 28, 2024 06:15 AM

ராமேஸ்வரம், : -ராமேஸ்வரத்தில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தனுஷ்கோடியில் கரை வலையில் சிக்கிய மீனுக்கு கிராக்கி அதிகரித்ததால் கிலோ ரூ.400க்கு விற்றனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி ராமேஸ்வரம் பகுதியில் 1500 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைத்து மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் நாட்டுப்படகில் சிக்கும் மீன்கள் பெரும்பாலும் வெளியூர் மீன் மார்க்கெட்டுக்கு செல்வதால், இப்பகுதியில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அசைவ பிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கடலில் வீசிய வலையை நுாறு மீனவர்கள் 5 குழுவாக பிரிந்து கடற்கரையில் நின்றபடி இடுப்பில் கயறு கட்டி இழுக்கும் கரை வலையில் 10 முதல் 15 கிலோ வரை சிறிய ரக நகரை மீன், வெளமீன், ஊழி மீன், கணவாய் மீன்கள் சிக்குகிறது.
ருசியான இம்மீன்கள் ராமேஸ்வரம் நகராட்சி மார்க்கெட்டுக்கு வந்ததும் அங்கு கூடியிருக்கும் ஏராளமான அசைவப் பிரியர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.
இந்த கிராக்கியை பயன்படுத்திய மீனவர்களும் கிலோ ரூ.400க்கு விற்கின்றனர்.
இருப்பினும் எதிர்பார்த்த மீன்வரத்து இல்லாததால் கூலி ரூ.500 மட்டுமே கிடைக்கும் என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

