/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
ராமேஸ்வரம் கோயில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ராமேஸ்வரம் கோயில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ராமேஸ்வரம் கோயில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : மார் 11, 2025 04:43 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதிகளில் போக்குவரத்தற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள், பக்தர்களுக்கு இடையூறாக கோயிலை சுற்றிலும் நான்கு ரத வீதிகளில் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தற்காலிக கடை அமைப்பவர்கள் யார், அவர்கள் பின்னணி குறித்தும் தெரியாததால் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. எனவே ரதவீதிகளை சுற்றிலும் ரோட்டில் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.