/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
/
தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 08, 2025 04:12 AM

தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணம் செல்லும் ரோட்டில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் அருகே அமைந்துள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர் மண்டி தாமரை படர்ந்துள்ளது.
இதனால் ஊருணி நீர் மாசடைந்து வருவதுடன், நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதியான இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் பராமரிப்பின்றி ஊருணி உள்ளதால் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே துறை அதிகாரிகள் நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.