/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவேரியார் சமுத்திரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிப்பு நீர் தேக்க வழியின்றி சிரமம்

ADDED : ஏப் 22, 2024 07:05 AM
கடலாடி, : -கடலாடி அருகே சவேரியார்பட்டினம் ஊராட்சி சவேரியார் சமுத்திரத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் தண்ணீரை தேக்க வழியின்றி சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் குடிநீர் திட்டத்தில் சவேரியார் சமுத்திரத்தில் வீடுகள்தோறும் பைப் லைன் பதிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.
மேல்நிலைத் தொட்டியில் நீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
சவேரியா சமுத்திரத்தில் குடிநீரை சேமிக்க நீர்த் தேக்க தொட்டி இல்லாத நிலையில் பைப் லைன் பதிக்கப்படுவதால் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவேரியார் பட்டினம் ஊராட்சி தலைவர் அகஸ்டின் கூறியதாவது:
கரூர் குடிநீர் திட்டத்தில் தற்போது பைப் லைன் பதிக்கப்படும் நிலையில் நீரை சேமித்து வைத்து குறிப்பிட்ட நேரங்களில் கிராம மக்களுக்கு வினியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அவசியத் தேவையாக உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய சேதமடைந்த தொட்டி இடிக்கப்பட்டுள்ளது. புதிய தொட்டி அமைத்தால் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
எனவே கடலாடி யூனியன் அலுவலகத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டி மனு கொடுத்துள்ளேன் என்றார்.