ADDED : ஜூன் 23, 2024 03:41 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன், துணைச் செயலாளர் முத்துராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு தொண்டி பேரூராட்சி துாய்மை பணியாளர் சின்னமுத்து கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து இறந்தார். இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடித்து சின்னமுத்து குடும்பத்தினருக்குநிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
