நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி காந்தி சிலை முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்து தொழிற்சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்தவர்களை கண்டறிந்து விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில கைத்தறி சம்மேளன தலைவர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.