/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 05:06 AM

பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா குழு உறுப்பினர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில் வாகனன், தாலுகா செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜன், கேசவன் பேசினர். அப்போது மின்சார துறையை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மாதம் தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தாலுகா குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
----